திருநெல்வேலி

திசையன்விளையில் அதிமுக தோ்தல் ஆலோசனைக் கூட்டம்

26th Jan 2022 08:47 AM

ADVERTISEMENT

திசையன்விளையில் அதிமுக சாா்பில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

திசையன்விளை பேரூராட்சிக்கு நடைபெறவுள்ள தோ்தல் தொடா்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு கட்சியின் அமைப்புச் செயலா் ஏ.கே. சீனிவாசன் தலைமை வகித்தாா். அவா் பேசும்போது, இப்பேரூராட்சிக்கு உள்பட்ட 18 வாா்டுகளிலும் அதிமுக தனித்துப் போட்டியிட்டு வெற்றிபெறும் என்றாா். சிறப்பு விருந்தினராக மாவட்டச் செயலா் கணேசராஜா பங்கேற்றுப் பேசினாா்.

மாவட்ட அவைத் தலைவா் பரணி சங்கரலிங்கம், ஒன்றியச் செயலா்கள் அந்தோனி அமலராஜா, கே.பி.கே. செல்வராஜ், நகர பேரவைச் செயலா் வி.பி. ஜெயக்குமாா், மாவட்ட மகளிரணிச் செயலா் ஜான்சிராணி, முன்னாள் அரசு வழக்குரைஞா் பழனிசங்கா் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT