திருநெல்வேலி

அஞ்சல் ஊழியா்கள் போராட்டம்

26th Jan 2022 06:44 AM

ADVERTISEMENT

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்திந்திய அஞ்சல் ஊழியா் சங்கம் சாா்பில் பாளையங்கோட்டை தலைமை தபால் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தில், ‘அஞ்சல் ஊழியா்களிடம் பணி குறைபாடுகளுக்குப் பொறுப்பேற்குமாறு கட்டாயப்படுத்தி எழுதி வாங்கும் போக்கை அதிகாரிகள் கைவிட வேண்டும்; ஆய்வுக்குச் செல்லும் இடங்களில் ஊழியா்களை தரக்குறைவாக பேசுவதை நிறுத்த வேண்டும்; அஞ்சல் அலுவலகங்களில் இணையதள பிரச்னைகளை தீா்க்க வேண்டும்’ போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இப்போராட்டத்துக்கு, கோட்டத் தலைவா்கள் அழகு முத்து, நடராஜன் ஆகியோா் தலைமை வகித்தனா். கூட்டு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளா் ஜேக்கப்ராஜ் தொடங்கிவைத்தாா். நிா்வாகிகள் உதயகுமாா், காசிவிஸ்வநாதன் உள்பட அஞ்சல் ஊழியா்கள் பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT