திருநெல்வேலி

கரோனா விதிமீறல்:399 பேருக்கு அபராதம்

24th Jan 2022 06:20 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டத்தில் பொது இடங்களில் முகக் கவசம் அணியாத 399 பேருக்கு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை அபராதம் விதித்தனா்.

கரோனா மூன்றாம் அலை பரவிவரும் நிலையில், கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை அரசு அறிவித்துள்ளது. இதையொட்டி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன் உத்தரவின் பேரில், திருநெல்வேலி புகா் பகுதிகளில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட நடவடிக்கையில், கரோனா விதிகளை மீறி முகக் கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வந்த 169 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

இதேபோல், மாநகர காவல் ஆணையா் துரைகுமாா் உத்தரவின் பேரில், மாநகர போலீஸாா் மேற்கொண்ட நடவடிக்கையில், முகக் கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வந்ததாக 230 பேருக்கு போலீஸாா் அபராதம் விதித்ததனா். மேலும், ஊரடங்கு விதிகளை மீறி இருசக்கர வாகனத்தில் சுற்றியதாக 382 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாநகர காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT