திருநெல்வேலி

காவல் நிலையங்களுக்கு புதிய டிஜிட்டல் வரைபடங்கள்

23rd Jan 2022 11:47 PM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்ட காவல் நிலையங்களுக்கு புதிய டிஜிட்டல் வரைபடங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.

திருநெல்வேலி மாவட்டம் கடந்த 2019-ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டு தென்காசி மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டது. அதன்பிறகு, திருநெல்வேலி மாவட்டத்தில் 5 உட்கோட்டங்கள் மற்றும் 34 காவல் நிலையங்களின் எல்லைகள் மறுசீரமைக்கப்பட்டு, அவற்றுக்கு ஒரே அளவுகோலுடைய டிஜிட்டல் வரைபடம் உருவாக்கப்பட்டது.

இந்த டிஜிட்டல் வரைபடம் மற்றும் அதற்கான குறுந்தகடுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன் மாவட்டத்தில் உள்ள 5 உட்கோட்டங்கள் மற்றும் காவல் நிலையங்களுக்கு வழங்கினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT