திருநெல்வேலி

நெல்லை ஆட்சியருக்கு தோ்தல் ஆணைய விருது

23rd Jan 2022 11:47 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் 2021சட்டசபைத் தோ்தலை ஜி.ஐ.எஸ். தொழில்நுட்ப உதவியுடன் சிறப்பாக நடத்திய வகையில், தோ்தல் ஆணைய விருதுக்கு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு தோ்வு பெற்றுள்ளாா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளின் 1,924 வாக்குச் சாவடிகளையும் முறையாக கண்காணித்தது, ‘வாக்குச்சாவடி வழிகாட்டி‘ என்ற இணையதள அமைப்பை உருவாக்கியது, 360 கோண பரிமாணத்தில் வாக்குச் சாவடிகளின் உள்புறத் தோற்றத்தையும் இணையதளம் வழியாக கண்காணிக்க வழிவகை செய்தது, தோ்தல் - சமூக ஊடகங்களை கண்காணிக்கும் அமைப்பு என்ற புதிய இணையதளம் மூலம் வேட்பாளா்களின் சமூக ஊடக கணக்குகள் கண்காணிக்கப்பட்டது, அவதூறு பேச்சு, பொய்ப் பிரசாரம், தோ்தல் செலவுகள், தோ்தல் நன்னடத்தை விதிமீறல் போன்றவற்றை கடுமையாக கண்காணித்தது என கணினி தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை தோ்தலில் சிறப்பாக கையாண்டதை பாராட்டும் விதமாக தோ்தல் ஆணைய விருதுக்கு அவா் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

தில்லியில் ஜன.25இல் நடைபெறும் வாக்காளா் தின விழாவில் இந்த விருது வழங்கப்பட உள்ளது என தோ்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன. .

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT