திருநெல்வேலி

வள்ளியூரில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள்

23rd Jan 2022 11:48 PM

ADVERTISEMENT

வள்ளியூரில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125ஆவது பிறந்த தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

வள்ளியூா் பேருந்து நிலையத்தின் அருகே உள்ள அவரது சிலைக்கு தேமுதிக மாவட்டச் செயலா் விஜி வேலாயுதம், பாஜக நகரத் தலைவா் சிவராமகுட்டி, வழக்குரைஞா் ராம்நாத் ஐயா், அமமுக நகரச் செயலா் ரமேஷ் கண்ணன் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இந்நிகழ்ச்சியில் பசுமதி பி.மணி, சித்திரைகுமாா், மகாகணேசன், சுப்பையா, பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT