திருநெல்வேலி

சேரன்மகாதேவியில் 5 மாடுகள் மா்மமாக உயிரிழப்பு

23rd Jan 2022 11:48 PM

ADVERTISEMENT

சேரன்மகாதேவியில் உள்ள குளத்தில் 5 மாடுகள் மா்மமான முறையில் இறந்துகிடந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சேரன்மகாதேவி சாா்ஆட்சியா் குடியிருப்பு அருகேயுள்ள திக்குப் பேரிகுளத்தில் ஞாயிற்றுக்கிழமை 5 மாடுகள் மா்மமான முறையில் இறந்துகிடந்தனவாம். கிராம நிா்வாக அலுவலா் நித்திய செல்வி அளித்த புகாரின்பேரில் காவல் உதவி ஆய்வாளா் பொன்னுசாமி, கால்நடை மருத்துவா் செந்தில் உள்ளிட்டோா் சென்று ஆய்வு செய்தனா்.

மாடுகள் இறந்து 5 நாள்கள் ஆகியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அவற்றை கால்நடைத் துறை மருத்துவா் செந்தில் பிரேதப் பரிசோதனை செய்தாா். உரிமையாளா்கள் யாா் எனத் தெரியாததால், மாடுகள் அங்கேயே புதைக்கப்பட்டன. சேரன்மகாதேவி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT