திருநெல்வேலி

கல்லிடைக்குறிச்சி தண்டவாளத்தில் ஆண் சடலம் மீட்பு

23rd Jan 2022 11:48 PM

ADVERTISEMENT

கல்லிடைக்குறிச்சியில் உள்ள தண்டவாளத்தில் ஆண் சடலம் மீட்கப்பட்டது.

கல்லிடைக்குறிச்சி புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள தண்டவாளத்தில் சனிக்கிழமை இரவு ஆண் சடலம் கிடப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில் போலீஸாா் சென்று பாா்த்தனா். இறந்துகிடந்தவருக்கு 40 வயதிருக்கலாம். சடலத்தை போலீஸாா் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்; இதுகுறித்து தென்காசி ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT