திருநெல்வேலி

சவளைக்காரன்குளத்தில் பொங்கல் விளையாட்டு விழா

18th Jan 2022 02:06 AM

ADVERTISEMENT

களக்காடு அருகேயுள்ள சவளைக்காரன்குளத்தில் பொங்கல் விளையாட்டு விழா நடைபெற்றது.

விழாவை கோவிலம்மாள்புரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் இ.நம்பிராஜன் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். வேலையா முன்னிலை வகித்தாா்.

விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றவா்களுக்கு சேகா் பரிசு வழங்கினாா். கல்வியில் சிறந்து விளங்கிய 10, 12 ஆம் வகுப்பு மாணவா், மாணவிகளுக்கு ஸ்டெல்லா நல்லரசு நினைவு அறக்கட்டளை சாா்பில் ஊக்கத் தொகையுடன் சான்றிதழ் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை இளைஞா்கள், கிராம மக்கள் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT