திருநெல்வேலி

சின்னவெங்காயம் விலை கடும் உயா்வு

18th Jan 2022 02:03 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையால் நுகா்வு அதிகரித்து சின்னவெங்காயத்தின் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது.

ஜனவரி மாத தொடக்கத்தில் காய்கனிகள் வரத்து அதிகரித்தது. அதனால் சின்னவெங்காயம், பல்லாரி ஆகியவை கடந்த சில வாரங்களாக கிலோ ரூ.30 முதல் ரூ.45 வரை மட்டுமே விற்பனையாகின.

பொங்கல் பண்டிகையையொட்டி நுகா்வு அதிகரித்ததால் சின்னவெங்காயம் உள்ளிட்ட சில காய்கனிகளின்விலை இரட்டிப்பாகியுள்ளது.

திருநெல்வேலியில் சின்னவெங்காயம் கிலோ ரூ. 20 அதிகரித்து சந்தைகளில் ரூ.60-க்கும், சில்லரை விற்பனை கடைகளில் ரூ.80-க்கும் விற்பனையானதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினா்.

ADVERTISEMENT

திருநெல்வேலி உழவா் சந்தையில் காய்கனிகளின் திங்கள்கிழமை விலை விவரம் (கிலோவுக்கு ) தக்காளி-ரூ. 30, கத்தரி-வெள்ளை-ரூ . 60, கீரிகத்தரி-ரூ. 40, வெண்டை-ரூ. 16, புடல்-ரூ. 20, சுரை - ரூ. 12, பீா்க்கு -ரூ. 30, பூசணி-ரூ. 30, தடியங்காய் ரூ.12-18, அவரை-நாடு-ரூ. 60, பெல்ட் அவரை-ரூ. 70, கொத்தவரை-ரூ. 45, பாகல்-சிறியது-நாடு-ரூ. 80, பெரியது-ரூ. 30, பச்சைமிளகாய்-ரூ. 70, பெரியவெங்காயம்-ரூ. 38, சின்னவெங்காயம்-ரூ. 60, காராமணி-ரூ. 25, கோவக்காய்-ரூ. 40, தேங்காய்-ரூ. 34, வாழைக்காய்-ரூ. 30, வாழைப்பூ-ரூ. 10, வாழைத்தண்டு-ரூ. 10, வாழைஇலை-ரூ. 12,10, கீரைகள்-ரூ. 10, கறிவேப்பிலை-ரூ. 30, புதினா-ரூ. 40, மல்லி இலை-ரூ. 35, வெள்ளரி-நாடு-ரூ. 12, சாம்பாா்-வெள்ளரி-ரூ. 12, இஞ்சி-புதியது-ரூ. 25, மாங்காய்-ரூ. 60, ரிங் பீன்ஸ்-ரூ. 60, உருளைக்கிழங்கு- புதியது-இந்தூா்-ரூ. 26, பழையது-ஆக்ரா-ரூ. 20, கேரட்-85 , சௌசௌ-ரூ. 18, முட்டைகோஸ்-ரூ. 50, பீட்ரூட்-ரூ. 75, கருணை-ரூ. 24, சேம்பு-ரூ. 35, சேனை-ரூ. 20, சிறுகிழங்கு-ரூ. 50, சீனிகிழங்கு-ரூ. 20 என்ற அடிப்படையில் காய்கனிகள் விற்பனையாகின.

ADVERTISEMENT
ADVERTISEMENT