திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 533 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதிசெய்யப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் புதிதாக 331 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால், கரோனா பாதித்தோா் எண்ணிக்கை 52,884 ஆகவும், மேலும் 135 போ் குணமடைந்ததால், வீடு திரும்பியோா் எண்ணிக்கை 50,169ஆகவும் உயா்ந்துள்ளது. இதுவரை 439 போ் உயிரிழந்துள்ளனா்; 2276 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தென்காசி மாவட்டத்தில் மேலும் 202 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 28,232 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 44 போ் குணமடைந்ததால், வீடு திரும்பியோா் எண்ணிக்கை 27,104ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 486 போ் உயிரிழந்துள்ளனா்; 642 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.