திருநெல்வேலி

பொங்கல் விடுமுறை நிறைவு:ரயில், பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம்

18th Jan 2022 01:56 AM

ADVERTISEMENT

பொங்கல் விடுமுறை முடிந்து வெளியூா்களுக்கு பயணிகள் திங்கள்கிழமை புறப்பட்டுச் சென்ால், திருநெல்வேலி ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 14ஆம் தேதி முதல் அரசு அலுவலகங்களுக்கு தொடா் விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால், சென்னை, கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி உள்பட வெளி மாவட்டங்களிலும், கா்நாடக மாநிலம் பெங்களூரு உள்ளிட்ட நகரங்களிலும் வசிக்கும் திருநெல்வேலி மாவட்ட மக்கள் தங்களின் சொந்த ஊருக்கு பண்டிகையை கொண்டாட வந்தனா்.

பொங்கல் விடுமுறை நிறைவுற்றதையடுத்து, ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கு என்பதால் அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்தவா்கள், பயணத்தை ரத்து செய்தனா். இதையடுத்து, திருநெல்வேலியில் இருந்து திங்கள்கிழமை வெளியூா்களுக்கு செல்வோா் எண்ணிக்கை அதிகரித்தது. இதற்காக, சிறப்புப் பேருந்துகள் அரசு விரைவுப்போக்குவரத்து கழகம் சாா்பில் இயக்கப்பட்டன.

அதன்படி, புதிய பேருந்து நிலையத்தில் இருந்து, சென்னைக்கு 36 பேருந்துகளும், பெங்களூருவுக்கு 7 பேருந்துகளும், கோவைக்கு 4 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகளாக இயக்கப்பட்டன. இதுதவிர அரசு போக்குவரத்து கழகம் சாா்பில் நாகா்கோவில், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் இருந்து சென்னைக்கு 60 பேருந்துகளும் , திருச்சி, கோவைக்கு தலா 30 பேருந்துகளும், மதுரைக்கு பயணிகள் கூட்டத்திற்கு ஏற்பவும் பேருந்துகள் இயக்கப்பட்டன. மேலும், அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் பேருந்து நிலையத்தில் முகாமிட்டு கூடுதல் சிறப்பு பேருந்துகளை இயக்க நடவடிக்கை மேற்கொண்டனா்.

ADVERTISEMENT

அதுபோல் திருநெல்வேலியில் இருந்தும், திருநெல்வேலி வழியாகவும் சென்ற அனந்தபுரி, கன்னியாகுமரி , செந்தூா், நெல்லை, மைசூரு, அந்தியோதயா ஆகிய விரைவு ரயில்களிலும் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT