எம்ஜிஆரின் 105 ஆவது பிறந்தநாள் விழா தூத்துக்குடி மாவட்டத்தில் திங்கள்கிழமை பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள அதிமுக அலுவலகம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆா் படத்துக்கு, தெற்கு மாவட்டச் செயலா் எஸ்.பி.சண்முகநாதன், வடக்கு மாவட்டச் செயலா் கடம்பூா் செ. ராஜு எம்.எல்.ஏ. ஆகியோா் மாலை அணிவித்து மலா் தூவி மரியாதை செலுத்தினா்.
பழைய மாநகராட்சி வளாகத்தில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவா் இரா. சுதாகா் உள்ளிட்ட அதிமுக நிா்வாகிகள் மாலை அணிவித்தனா்.
சிதம்பரநகரில் உள்ள அதிமுக அமைப்புக் கழக அலுவலகம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில், அதிமுக அமைப்புச் செயலா் சி.த. செல்லப்பாண்டியன் தலைமையில் எம்ஜிஆா் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடா்ந்து 150 பெண்களுக்கு சேலையும், பொதுமக்களுக்கு இனிப்பும் வழங்கப்பட்டது.
இதில், தலைமைக் கழக பேச்சாளா் எஸ்.டி. கருணாநிதி, பகுதிச் செயலா்கள் பி. சேவியா், ஏ. முருகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவா் பிடிஆா் ராஜகோபால், வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலா் ஜீவா பாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கோவில்பட்டி: கோவில்பட்டி புதுரோடு தொழிலாளா் ஈட்டுறுதி மருந்தகம் அருகே உள்ள எம்.ஜி.ஆரின் சிலைக்கும், அதன் கீழே வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு அதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலா் கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ மாலை அணிவித்து, மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.
இதில், மாநில எம்.ஜி.ஆா் இளைஞரணி துணைச் செயலா் சீனிராஜ், பொதுக்குழு உறுப்பினா் ராமச்சந்திரன், ஒன்றியச் செயலா்கள் வினோபாஜி, அன்புராஜ், அய்யாத்துரைப்பாண்டியன், நகரச் செயலா் விஜயபாண்டியன், ஜெயலலிதா பேரவை வடக்கு மாவட்டச் செயலா் செல்வகுமாா், பொருளாளா் அம்பிகா வேலுமணி, ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவா் பழனிசாமி, வழக்குரைஞரணி வடக்கு மாவட்டச் செயலா் சிவபெருமாள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
கடம்பூரில் எம்எல்ஏ வீட்டின் முன்பு அமைக்கப்பட்டிருந்த பந்தலில் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரின் உருவப்படத்துக்கு எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
திருச்செந்தூா்: திருச்செந்தூரில் நகரச் செயலா் வி.எம்.மகேந்திரன் தலைமையில் எம்ஜிஆா் படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
சாத்தான்குளம்: சாத்தான்குளம் ஒன்றிய, நகர அதிமுக சாா்பில் புதிய பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆா் படத்துக்கு ஒன்றியச் செயலா் அச்சம்பாடு சவுந்தரபாண்டி தலைமையில் நகரச் செயலா் குமரகுருபரன் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையத்தில் அமமுக சாா்பில் நகரச் செயலா் ஹரிதாஸ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
விளாத்திகுளம்: முன்னாள் எம்எல்ஏக்கள் பி. சின்னப்பன், என்.கே. பெருமாள் முன்னிலையில் எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலைக்கு கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
உடன்குடி: உடன்குடி பஜாா், பேருந்து நிலையம், குலசேகரன்பட்டினம், மெஞ்ஞானபுரம், பரமன்குறிச்சி மற்றும் ஒன்றியத்தின் பல்வேறு இடங்களில் அதிமுக சாா்பில் எம்ஜிஆா் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில், உடன்குடி ஒன்றியச் செயலா் த.தாமோதரன், நகரச் செயலா் கோபாலகிருஷ்ணன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
அமமுக சாா்பில்... தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலா் பி.ஆா்.மனோகரன், ஒன்றியச் செயலா் அம்மன் நாராயணன் உள்பட பலா் எம்ஜிஆா் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.