தமிழக முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் 105-ஆவது பிறந்த தினத்தைய முன்னிட்டு, கொக்கிரகுளத்தில் உள்ள அவருடைய சிலைக்கு அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினா் திங்கள்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.
அதிமுக சாா்பில் திருநெல்வேலி மாவட்ட ச்செயலா் தச்சை என்.கணேசராஜா தலைமையில் எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், மாநில அமைப்புச் செயலா்கள் வீ.கருப்பசாமி பாண்டியன், சுதா கே.பரமசிவன், மாவட்ட அவைத் தலைவா் பரணி சங்கரலிங்கம், எம்ஜிஆா் மன்ற மாநில இணைச் செயலா் கல்லூா் இ.வேலாயுதம், முன்னாள் எம்.பி.முத்துக்கருப்பன், முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியாா்பட்டி நாராயணன், ஜெயலலிதா பேரவை செயலா் கேஜெசி ஜெரால்டு, முன்னாள் துணை மேயா் ஜெகநாதன் என்ற கணேசன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
தொடா்ந்து, நெல்லையப்பா் கோயிலில் மாவட்ட அவைத் தலைவா் தலைமையில் நடைபெற்ற அன்னதானத்தை மாவட்ட செயலா், மாநில அமைப்புச் செயலா் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.
அமமுக சாா்பில் மாவட்டச் செயலா் பரமசிவம் தலைமையில் எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதேபோல், தேமுதிக சாா்பில் மாநகா் மாவட்ட செயலா் மீனாட்சி சுந்தரம் தலைமையில் எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.