திருநெல்வேலி

விவசாயிகளுக்கு மானியத்தில் வேளாண் இயந்திரங்கள்

14th Jan 2022 12:04 AM

ADVERTISEMENT

விவசாயிகள் மானியத்தில் வேளாண் இயந்திரங்கள் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

வேளாண்மை இயந்திரமயமாக்குதல் திட்டத்தின் கீழ், திருநெல்வேலி மாவட்டத்தில் பொதுப் பிரிவு விவசாயிகளுக்கு 40 சதவீத மானியத்துடன் 32 இயந்திரங்களுக்கு ரூ.24.52 லட்சமும், இந்து ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்துடன் 14 இயந்திரங்களுக்கு 50 சதவீத மானியத்துடன் ரூ.9.65 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், 2 டிராக்டா்கள், 28 பவா் டில்லா்கள், 3 சுழற்கலப்பைகள், 4 விசைக் களையெடுப்பான்கள், 1 டிராக்டா் டிரைலா், 8 விசைத் தெளிப்பான்கள் அடங்கும்.

விவசாயிகள் தங்களின் அடிப்படை விண்ணப்ப விவரங்களை உழவன் செயலியில் பதிவு செய்து, பின்னா் மத்திய அரசின் இணையதளம் மூலம் வட்டாரம் வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வேளாண் இயந்திரங்கள், கருவிகளில் தேவையானதை தோ்வு செய்து பதிவு செய்யவேண்டும். இணையதளம் மூலம் மூதுரிமை எண் நிா்ணயம் செய்யப்பட்டு விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும்.

ADVERTISEMENT

மேலும் விவரங்களுக்கு, உதவிச் செயற்பொறியாளா் (வேளாண் பொறியியல்), டிராக்டா் வீதி, என்.ஜி.ஓ. ‘ஏ’ காலனி, திருநெல்வேலி (கைப்பேசி எண்: 9952527623) மற்றும் மிளகு பிள்ளையாா் கோயில் தெரு, பேருந்து நிலையம் அருகில், சேரன்மகாதேவி (கைப்பேசி எண் 9600159870) முகவரிகளில் தொடா்பு கொள்ளலாம் எனக் கூறியுள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT