திருநெல்வேலி

9 சிறப்பு பள்ளிகளுக்கு ரூ.2.18 லட்சத்தில் உபகரணங்கள்: ஆட்சியா் வழங்கினாா்

12th Jan 2022 08:38 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டத்தில் 9 சிறப்பு பள்ளிகளுக்கு ரூ.2.18 லட்சத்தில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட மென்பொருளுடன் கூடிய உபகரணங்களை மாவட்ட ஆட்சியா் திங்கள்கிழமை வழங்கினாா்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சாா்பில் 9 சிறப்பு பள்ளிகளுக்கு ரூ.2,18,160 மதிப்பில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட மென்பொருளுடன் கூடிய உபகரணங்களை சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு வழங்கிய ஆட்சியா் வே. விஷ்ணு கூறியதாவது:

திருநெல்வேலி மாவட்டத்தில் நேரடியாக பிறருடன் தொடா்பு கொள்ள இயலாத நிலையில் உள்ள மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட புற உலகு சிந்தனை இல்லாத மற்றும் மூளை வளா்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகள் மாற்று வழியில் பிறருடன் தொடா்பு கொள்ள உதவும் வகையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் 9 சிறப்பு பள்ளிகளுக்கு தலா ரூ.24,240 மதிப்பிலான பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட மென்பொருளுடன் கூடிய உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றாா்.

இந்நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் பிரம்மநாயகம், முடநீக்கியல் வல்லுநா் பிரபாகரன், சிறப்பு பள்ளி ஆசிரியா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT