பாளையங்கோட்டை அருகே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற லாரி ஓட்டுநா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
பாளையங்கோட்டை அருகேயுள்ள அரியகுளம் பகுதியைச் சோ்ந்தவா் பேச்சிமுத்து (28). லாரி ஓட்டுநா். இவருக்கும், மனைவிக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்ததாம். இதுகுறித்து, திருநெல்வேலி ஊரக அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் மனைவி அளித்தாராம்.
இந்நிலையில், கடந்த 19.12.2021இல் பேச்சிமுத்து விஷத்தைக் குடித்து மயங்கி விழுந்தாராம். குடும்பத்தினா் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
இதையடுத்து, அவரது உடலை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் பாளையங்கோட்டை காவல் ஆய்வாளா் திருப்பதி மற்றும் போலீஸாா் பேச்சு நடத்தி சடலத்தை ஒப்படைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.