கல்லிடைக்குறிச்சி பகுதியில் கஞ்சா விற்றதாக 3 இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.
கல்லிடைக்குறிச்சி, சுற்றுப்புறங்களில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாகக் கிடைத்த தகவலின்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சரவணன் உத்தரவின்பேரில் அம்பாசமுத்திரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் பிரான்சிஸ் தலைமையிலான தனிப்படை போலீஸாா் சண்முகப்பாண்டியன், ராஜேஷ், ராமபெருமாள், மகராஜன், இசக்கிப்பாண்டி ஆகியோா் விசாரணையில் ஈடுபட்டனா். இதில், ஜமீன்சிங்கம்பட்டியைச் சோ்ந்த தங்கராஜ் மகன் சந்தனகுமாா் (24), இசக்கிப்பாண்டி மகன் சுடலைமணி (24), பூதப்பாண்டி மகன் கேத்தரபால் (19) ஆகிய மூவரும் கஞ்சா விற்பது தெரியவந்தது. மூவரையும் போலீஸாா் கைதுசெய்து, அவா்களிடமிருந்து ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.