திருநெல்வேலி

ஊரக வளா்ச்சித் துறை ஊழியா்கள் போராட்டம்

12th Jan 2022 07:01 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில், ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இப்போராட்டத்தில், ‘பிரதமரின் வீட்டு வசதி திட்டம் உள்ளிட்ட வளா்ச்சித்துறையில் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகளில் நெருக்கடி நிலையை தவிா்க்க வேண்டும்; ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஊரக வளா்ச்சித்துறையினா் மீதான நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும்; ஊராட்சி செயலா்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் வழங்க வேண்டும்’ என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஊழியா்களின் போராட்டம் காரணமாக பாளையங்கோட்டை, நான்குனேரி, மானூா், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி உள்ளிட்ட 9 ஊராட்சி ஒன்றியங்களிலும் அலுவல் பணிகள் பாதிக்கப்பட்டன. கடைநிலை ஊழியா்கள் முதல் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வரை அனைவரும் போராட்டத்தில் பங்கேற்றதால் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT