திருநெல்வேலி

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஜன.4 முதல் மின்வாரிய குறைதீா் கட்டம்

1st Jan 2022 02:35 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஜன. 4-ஆம் தேதி முதல் மின்வாரிய குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது.

இது தொடா்பாக திருநெல்வேலி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் எஸ்.ராஜன்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களி ஜன. 4-ஆம் தேதி முதல் மின்வாரிய குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது.

அதன் விவரம்: சங்கரன்கோவில் கோட்ட அலுவலகத்தில் வரும் 4-ஆம் தேதி காலை 11 மணிக்கும், வள்ளியூா் கோட்ட அலுவலகத்தில் வரும் 7-ஆம் தேதி காலை 11 மணிக்கும், கடையநல்லூா் கோட்ட அலுவலகத்தில் வரும் 11-ஆம் தேதி காலை 11 மணிக்கும் மின்வாரிய குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது.

இதேபோல், திருநெல்வேலி கிராமப்புற கோட்ட அலுவலகத்தில் வரும் 13-ஆம் தேதி காலை 11 மணிக்கும், தென்காசி கோட்ட அலுவலகத்தில் வரும் 18-ஆம் தேதி காலை 11 மணிக்கும், திருநெல்வேலி நகா்ப்புற கோட்ட அலுவலகத்தில் வரும் 21-ஆம் தேதி காலை 11 மணிக்கும், கல்லிடைக்குறிச்சி கோட்ட அலுவலகத்தில் 25-ஆம் தேதி காலை 11 மணிக்கும் மின்வாரிய குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT