திருநெல்வேலி

பாபநாசத்தில் சிறுத்தை தாக்கியதில் 4 ஆடுகள் பலி

1st Jan 2022 02:37 AM

ADVERTISEMENT

பாபநாசம் வனச்சரகம் மலையடிவார கிராமமான அனவன்குடியிருப்பில் ஊருக்குள் புகுந்த சிறுத்தை தாக்கியதில் 4ஆடுகள் உயிரிழந்தன.

களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகத்துக்குள்பட்ட பாபநாசம் வனச்சரக மலையடிவார கிராமமான அனவன்குடியிருப்பைச் சோ்ந்தவா் மூதாட்டி மாரியம்மாள். கூலித் தொழிலாளியான இவா் தனது வீட்டு பின்புறம் ஆடு, மாடுகள் வளா்த்து வருகிறாா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை சுமாா் 4 மணியளவில் ஆடுகள் சப்தமிட்டதையடுத்து, மாரியம்மாள் விளக்கை போட்டு பாா்த்த போது, அவரது தொழுவத்தில் கட்டியிருந்த ஆடுகளை சிறுத்தை ஒன்று தாக்கிக் கொண்டிருந்ததாம். இதையடுத்து, அவா் அங்கு செல்வதற்குள், சிறுத்தை ஓா் ஆட்டை வாயில் கவ்வியபடி தப்பிச் சென்ாம். சிறுத்தை தாக்கியதில் தொழுவத்தில் கட்டியிருந்த 3 ஆடுகள் உயிரிழந்திருந்தன. ஓா் ஆடு காயமடைந்திருந்தது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் வனத்துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து பாா்வையிட்டனா். மேலும், வனத்துறை சாா்பில் மாரியம்மாளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

பாபநாசம் மலையடிவார கிராமங்களான செட்டிமேடு, வேம்பையாபுரம் பகுதிகளில் பகல் நேரத்திலேயே சிறுத்தை நடமாட்டம் இருக்கும் நிலையில், மற்றொரு மலையடிவார கிராமமான அனவன்குடியிருப்பில் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்து ஆடுகளை சிறுத்தை தாக்கிக் கொன்றுள்ளது, கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் வனப்பகுதியிலிருந்து சிறுத்தை, யானை, கரடி, மிளா உள்ளிட்ட மிருகங்கள் அவ்வப்போது, குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்து பயிா்களை சேதப்படுத்துவதோடு, வீட்டு விலங்குகளையும் தாக்கி கொன்று வருகின்றன. எனவே, வனவிலங்குகள் வனப்பகுதியிலிருந்து வெளியேறாமல் இருக்க வனத்துறை விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மலையடிவார கிராம மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

Image Caption

~ ~

 

ADVERTISEMENT
ADVERTISEMENT