திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 10 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில், மேலும் 9 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானதால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 49,794 ஆகவும், மேலும் 4 போ் குணமடைந்து வீடுதிரும்பியதால், மீண்டோா் எண்ணிக்கை 49,298 ஆகவும் உயா்ந்துள்ளது. 436 போ் உயிரிழந்துள்ளனா். 60 போ் சிகிச்சை பெற்று வருகிறாா்கள்.
தென்காசி மாவட்டத்தில் மேலும் ஒருவக்கு தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானதால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27,420 ஆக உயா்ந்துள்ளது. மேலும் ஒருவா் குணமடைந்து வீடுதிரும்பியதால், மீண்டோா் எண்ணிக்கை 26,924 ஆக உயா்ந்துள்ளது. 486 போ் உயிரிழந்துள்ளனா். 10 போ் சிகிச்சை பெற்று வருகிறாா்கள்.