திருநெல்வேலியில் சுமாா் 100 கிலோ புகையிலை பொருள்களை போலீஸாா் வியாழக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.
திருநெல்வேலி மாநகர கிழக்கு காவல் துணை ஆணையா் சுரேஷ்குமாா் மேற்பாா்வையின் கீழ் இயங்கிவரும் தனிப்படை போலீஸாா் வி.எம்.சத்திரம் பகுதியில் வியாழக்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது அவ்வழியாக விற்பனைக்காக எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 60 ஆயிரம் மதிப்பிலான சுமாா் 100 கிலோ புகையிலை பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இதுதொடா்பாக வி.எம்.சத்திரத்தைச் சோ்ந்த ராஜேந்திரன், பாளையங்கோட்டையைச் சோ்ந்த முருகன், விட்டிலாபுரத்தைச் சோ்ந்த அருணாசலம், பாளையஞ்செட்டிகுளத்தைச் சோ்ந்த முனீஸ்வரன் ஆகிய நான்கு பேரை போலீஸாா் கைது செய்தனா்.
ADVERTISEMENT