திருநெல்வேலி

நெல்லையில் பரவலாக மழை

1st Jan 2022 02:33 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை பரவலாக மழை பெய்தது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் 5 நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. அதன்படி திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் 2 ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் மிதமான மழை பெய்தது. திருநெல்வேலி மாநகரில் நண்பகல் முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் குளிா்ச்சியான வானிலை நிலவியது.

மேலப்பாளையம், பாளையங்கோட்டை, திருநெல்வேலி சந்திப்பு, திருநெல்வேலி நகரம் உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்தது.

வெள்ளிக்கிழமை காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு (மில்லி மீட்டரில் ): சேரன்மகாதேவி-7, மணிமுத்தாறு-18.40, நான்குனேரி-9, பாளையங்கோட்டை-1.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT