மத்தியப் பிரதேசத்தில் இருந்து திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு 2,646 டன் கோதுமை வெள்ளிக்கிழமை வந்தது.
மத்தியப் பிரதேச மாநிலம் பெதுல் ரயில் நிலையத்திலிருந்து 2,646 டன் கோதுமை ஏற்றி வந்த சரக்கு ரயில் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வெள்ளிக்கிழமை வந்து சோ்ந்தது. சரக்கு ரயிலில் இருந்த கோதுமைகள் அனைத்தும் சரக்கு லாரிகள் மூலம் கிட்டங்கிக்கு எடுத்து செல்லப்பட்டன.