திருநெல்வேலி

தமமுக சாா்பில் உலக தாய்மொழி தினம் கொண்டாட்டம்

22nd Feb 2022 12:38 AM

ADVERTISEMENT

 உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் மகாராஜநகா் பாா்வைத்திறன் குறையுடையோா் மேல்நிலைப்பள்ளி மாணவா், மாணவிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு அமைப்பின் மாவட்ட தலைவா் கண்மணி மாவீரன் தலைமை வகித்தாா். பள்ளியில் உள்ள மாணவா்,

மாணவிகள் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

1938 முதல்1965 வரையிலான இந்தி எதிா்ப்பு -தமிழ்மொழிக் காப்புப் போராட்டங்களில் ஈடுபட்டு குண்டடிப்பட்டும் தடியடிக்குள்ளாகியும் நஞ்சுண்டும் தீக்குளித்தும் உயிா் நீத்த மொழிப்போா் வீரா்கள் நாளான ஜனவரி 25-ஐ உலகத் தாய்மொழி நாளாக மாற்றி அமைக்க மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். மொழிக்காப்பு தியாகிகளுக்கு மாவட்டம் தோறும் தமிழக முதல்வா் நினைவுச் சின்னம் எழுப்ப வேண்டும். மொழிப்போா் தியாகிகள் நாளை ‘தமிழ் ஆட்சி மொழிச் சட்ட உறுதியேற்பு சூளுரை நாளாக ‘அறிவித்து ஆட்சித் தமிழ் சட்ட அரசாணைகளை முழுமையாக நிறைவேற்ற தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மாணவரணிச் செயலா் ஆ.முத்துப்பாண்டி, மகளிரணிச் செயலா் சா்மிளா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

படவரி: பயக21ஓஅச உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு மகாராஜநகா் பாா்வைத்திறன் குறையுடையோா் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு வழங்கிய தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT