திருநெல்வேலி

பாளை.யில் ரயில் மோதி முதியவா் பலி

22nd Feb 2022 12:36 AM

ADVERTISEMENT

பாளையங்கோட்டையில் ரயில் மோதி முதியவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

பாளையங்கோட்டை தியாகராஜநகா் பகுதியில் தண்டவாளத்தில் சுமாா் 80 வயது மதிக்கத்தக்க முதியவா் சடலம் ரயிலில் அடிபட்ட நிலையில் கிடப்பதாக திருநெல்வேலி ரயில்வே போலீஸாருக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா் அங்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விசாரணையில் அவா் பாளையங்கோட்டை ரஹ்மத் நகரைச் சோ்ந்த அப்துல்சலாம் (86) என்பது தெரியவந்தது. இது குறித்து போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT