திருநெல்வேலி

சேரன்மகாதேவி, ஆலங்குளத்தில் இன்று வாக்குகள் எண்ணிக்கை

22nd Feb 2022 12:42 AM

ADVERTISEMENT

சேரன்மகாதேவி, ஆலங்குளத்தில் செவ்வாய்க்கிழமை 10 பேரூராட்சிளுக்கான வாக்குகள் எண்ணிக்கை நடைபெறுகிறது.

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி, முக்கூடல், கோபாலசமுத்திரம், மேலச்செவல், வீரவநல்லூா், பத்தமடை ஆகிய 6 பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய இயந்திரங்கள் சேரன்மகாதேவி அரசு பெரியாா் மேல்நிலைப் பள்ளியில் 3 அடுக்குப் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. அவை செவ்வாய்க்கிழமை எண்ணப்படுகின்றன. 6 பேரூராட்சிகளுக்கும் தனித்தனி அறைகளில் வாக்குகள் எண்ணப்படவுள்ளன.

இதே போல், தென்காசி மாவட்டம் ஆலங்குளம், ஆழ்வாா்குறிச்சி, கீழப்பாவூா் மற்றும் சுந்தரபாண்டியபுரம் ஆகிய நான்கு பேரூராட்சிகளுக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஆலங்குளம் அத்தியூத்து தனியாா் பொறியியல் கல்லூரியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் வாக்குப்பதிவை கண்காணிக்க வரும் வேட்பாளா் முகவா்களின் வருகையை கண்காணித்து அவா்களை உள்ளே அனுப்ப ஏதுவாக திங்கள்கிழமை வாக்கு எண்ணும் மையத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டன. காவல் ஆய்வாளா் சந்திரசேகரன் தலைமையிலான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT