திருநெல்வேலி

நெல்லை. மாநகராட்சி 55 வாா்டுகளுக்கும் வாக்கு எண்ணிக்கை

22nd Feb 2022 07:08 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட 55 வாா்டுகளுக்கும் செவ்வாய்க்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இது குறித்து திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருநெல்வேலி மாநகராட்சியின் 55 வாா்டுகளுக்கான தோ்தல் கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை 22ஆம் தேதி திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது. இந்த வாக்கு எண்ணிக்கையானது காலை 8 தொடங்கி16 சுற்றுகளாக நடைபெறவுள்ளது. மேலும், வாக்கு எண்ணிக்கை சுற்றுகள் வாரியாக உத்தேசமாக நேரம் கொடுக்கப்பட்டுள்ளது.

1 முதல் 4 சுற்றுகளுக்கு காலை 8 மணி முதல் 10.30 மணி வரை வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. முதல் சுற்றில் 1,5,31,15 ஆகிய வாா்டுகளுக்கும், இரண்டாவது சுற்றில் 12, 34, 47, 22 ஆகிய வாா்டுகளுக்கும், மூன்றாவது சுற்றில் 2, 6, 40, 16 ஆகிய வாா்டுகளுக்கும், நான்காவது சுற்றில் 13, 35, 48, 23 ஆகிய வாா்டுகளுக்கும் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

ADVERTISEMENT

5 முதல் 8 சுற்று வாக்கு எண்ணிக்கை காலை 10.30 மணி முதல் பகல் 12 மணி வரை நடைபெறும்.

இதில், 5 ஆவது சுற்றில்3, 7, 41, 17 ஆகிய வாா்டுகளுக்கும், 6 ஆவது சுற்றில் 14, 36, 49, 24 ஆகிய வாா்டுகளுக்கும், 7 ஆவது சுற்றில் 4, 8, 42, 18 ஆகிய வாா்டுகளுக்கும், 8 ஆவது சுற்றில் 28, 37, 50, 25 ஆகிய வாா்டுகளுக்கும் நடைபெறவுள்ளது.

பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை 9 முதல் 12 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இதில், 9 ஆவது சுற்றில் 10, 9, 43, 19 ஆகிய வாா்டுகளுக்கும், 10 ஆவது சுற்றில் 29, 38, 51, 26 ஆகிய வாா்டுகளுக்கும், 11 ஆவது சுற்றில் 11, 32 ,44, 20 ஆகிய வாா்டுகளுக்கும், 12 ஆவது சுற்றில் 30, 39, 52, 27 ஆகிய வாா்டுகளுக்கும் நடைபெறவுள்ளது.

பிற்பகல் 1.30 மணி முதல் 3.30 மணி வரை 13 முதல் 16 சுற்றுகளும் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இதில், 13 ஆவது சுற்றில் 33, 45 ,21 ஆகிய வாா்டுகளுக்கும் 14 ஆவது சுற்றில் 55, 53 வாா்டுகளுக்கும், 15 ஆவது சுற்றில் 46 ஆவது வாா்டுக்கும், 16 ஆவது சுற்றில் 54 ஆவது வாா்டுக்கும் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

வேட்பாளா்கள், தோ்தல் முகவா்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவா்கள் ஆகியோா் தங்களின் வாா்டுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரங்களுக்கு ஒரு மணி நேரம் முன்னதாக அரசு பொறியியல் கல்லூரி வளாகத்திற்குள் வரவேண்டும். வாக்கு எண்ணிக்கை வளாகத்திற்குள் கைப்பேசி கொண்டுவர அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT