திருநெல்வேலி

நெல்லையில் 14 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

22nd Feb 2022 07:08 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி பெருமாள்புரம் பகுதியில் சுமாா் 14 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளா் துரைக்குமாா் உத்தரவின் பேரில், மாநகர காவல் துணை ஆணையா்(கிழக்கு)டி.பி.சுரேஷ்குமாா் மேற்பாா்வையின் கீழ் இயங்கிவரும் தனிப்படையில் காவல் உதவி ஆய்வாளா் காசிப்பாண்டியன் தலைமையிலான போலீஸாா் பெருமாள்புரம், தியாகராஜநகா் பகுதிகளில் வாகனச் சோதனையில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

அப்போது அந்த வழியாக வந்த லாரி, மற்றும் காா் ஆகியவற்றை சோதனை செய்ததில், அதில் ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தியதுதெரிய வந்தது. இதையடுத்து, ரேஷன் அரிசி கடத்தியதாக உடையாா்ப்பட்டி சுடலைக்குமாா் (21), வண்ணாா்பேட்டையை இசக்கிமுத்து (24), கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை தினேஷ்குமாா் (24 ) ஆகிய மூன்று போரை யும் போலீஸாா் கைது செய்தனா்.

மேலும், கடத்தலுக்குப் பயன்படுத்திய லாரி, சுமோ , சுமாா் 14 டன் ரேஷன் அரசி ஆகியவற்றை, திருநெல்வேலி குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக மாநகர காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT