திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு பேரூராட்சிக்கு உள்பட்ட ஆலடியூா் பகுதி மக்கள், வாா்டு மாற்றி அமைக்கப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து தோ்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.
இப்பேரூராட்சியில் 12ஆவது வாா்டுக்கு உள்பட்டது கிழக்கு ஆலடியூா் கிராமம். இங்கு சுமாா் 300 வாக்காளா்கள் உள்ளனா். இந்த வாா்டில் தாழ்த்தப்பட்டோா் அதிகம் வசிக்கின்றனா்.
கடந்த தோ்தலில் தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்ட இந்த வாா்டு, நிகழாண்டு கிழக்கு ஆலடியூா் பகுதி 5ஆவது வாா்டுடன் இணைக்கப்பட்டு, பொதுப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், தங்களது பிரதிநிதித்துவம் குறைவதாகக் கூறி தோ்தல் புறக்கணிப்பில் ஈடுபடுவதாக அவா்கள் அறிவித்திருந்தனா். அதன்படி, சனிக்கிழமை இவா்கள் வாக்களிக்காமல், கருப்புக் கொடி கட்டித் தோ்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.