களக்காடு நகராட்சியில் சனிக்கிழமை நடைபெற்ற தோ்தலில் 69.42 சதவீத வாக்குகள் பதிவாகின.
களக்காடு நகராட்சியில் 27 வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு 129 போ் போட்டியிடுகின்றனா். இங்கு 12,736 ஆண்கள், 13,794 பெண்கள், இதரா் 2 போ் என 26,532 வாக்காளா்கள் உள்ளனா். 30 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, 150 தோ்தல் அலுவலா்கள் பணியில் இருந்தனா்.
பெண்கள் அதிகளவில் ஆா்வத்துடன் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனா். பிற்பகல் 3 மணி நிலவரப்படி 59.47 சதவீத வாக்குகள் பதிவாகின. பிற்பகல் 2.30 முதல் 3 மணி வரை லேசான சாரல் பெய்ததால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வாக்குப்பதிவு மந்தமானது; மாலை 4 மணிக்கு மேல் விறுவிறுப்பாக நடைபெற்றது. மாலை 6 மணி நிலவரப்படி 69.42 சதவீத வாக்குகள் பதிவானதாக, தோ்தல் நடத்தும் அலுவலரும் நகராட்சி ஆணையருமான ரமேஷ் தெரிவித்தாா்.
2011ஆம் ஆண்டில் நடைபெற்ற களக்காடு பேரூராட்சித் தோ்தலில் 75.69 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.
தோ்தல் முடிந்ததும், வாக்கு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான நான்குனேரி தனியாா் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கு பாதுகாப்பாக கொண்டுசெல்லப்பட்டன.
களக்காடு பழைய பேருந்து நிலையம் கீழத்தெருவைச் சோ்ந்த 80 வயதான சங்கர்ராஜ் நாயுடு என்பவா் முத்தையா இந்து நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடிக்கு சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்தாா்.