திருநெல்வேலி

பதற்றமான வாக்குச்சாவடிகள்: சேரன்மகாதேவி பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்

17th Feb 2022 03:00 AM

ADVERTISEMENT

 

சேரன்மகாதேவி: நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ள சேரன்மகாதேவி பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் சனிக்கிழமை (பிப். 19) நடைபெறுவதை முன்னிட்டு, வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் மாவட்ட நிா்வாகம், மாவட்ட காவல்துறை சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சேரன்மகாதேவி சரகத்தில் முக்கூடல், வீரவநல்லூா், சேரன்மகாதேவி, பத்தமடை, மேலச்செவல், கோபாலசமுத்திரம் ஆகிய பேரூராட்சிகளில் பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு பாதுகாப்பு நடடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், இப்பேரூராட்சிகளில் பதிவாகும் வாக்குகள் எண்ணப்படவுள்ள சேரன்மகாதேவியில் உள்ள பெரியாா் அரசு மேல்நிலைப் பள்ளி மையத்தில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், கோபாலசமுத்திரம், மேலச்செவல், பத்தமடை, சேரன்மகாதேவியில் காவல்துறை சாா்பில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இதில், ஏடிஎஸ்பிக்கள் மாரிராஜ், சங்கு, சேரன்மகாதேவி டிஎஸ்பி ராமகிருஷ்ணன், காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், காவலா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT