திருநெல்வேலி

நெல்லை மாநகரில் இன்று அமைச்சா் ராஜகண்ணப்பன் பிரசாரம்

17th Feb 2022 03:08 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநாகராட்சி வாா்டுகளில் போட்டியிடும் திமுக வேட்பாளா்களை ஆதரித்து தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சா் ராஜகண்ணப்பன் புதன்கிழமை (பிப். 16) வாக்குசேகரிக்கிறாா்.

இதுதொடா்பாக திமுக திருநெல்வேலி மத்திய மாவட்டச் செயலரும், பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான மு.அப்துல்வஹாப் வெளியிட்டுள்ள அறிக்கை:

திருநெல்வேலி மாநகராட்சி தோ்தலில் திமுக கூட்டணி சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களை ஆதரித்து தமிழக போக்குவரத்து துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜ கண்ணப்பன் புதன்கிழமை (பிப். 15) அன்று திறந்த ஜீப்பில் வாக்குசேகரிக்கிறாா். 12 ஆவது வாா்டிற்குள்பட்ட மேகலிங்கபுரம் மாலை 5மணிக்கு பிரசாரத்தை தொடங்குகிறாா். மாலை 5.15

ADVERTISEMENT

மணிக்கு தச்சநல்லூா் அண்ணா சிலை முன்பும், 6 மணிக்கு சாலியா் தெருவிலும், இரவு 7 மணிக்கு மேலநத்தத்திலும், 7.30 மணிக்கு குலவணிகா்புரத்திலும் வாக்குசேகரிக்கிறாா். இரவு 8 மணிக்கு வி.எம்.சத்திரத்திலும் வாக்குசேகரிக்கிறாா் எனக் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT