திருநெல்வேலி

நெல்லையப்பா் கோயிலில் அப்பா் தெப்ப திருவிழா

17th Feb 2022 02:50 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி: திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் கோயிலில் அப்பா் தெப்ப திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

சைவ சமயக்குரவா்களில் ஒருவரான அப்பா் பெருமானின் ஆழ்ந்த பக்தியை பரிசோதிக்கும் வகையில், அவரை கல்லில் கட்டி கடலில் போட்டாா்கள். அப்போது கல்லானது தெப்பமாக மாறி கடலில் மிதந்தது. இந்த நிகழ்வை நினைவுக்கூரும் வகையில் திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் கோயிலில் உள்ள பொற்றாமரை திருக்குளத்தில் அப்பா் தெப்ப திருவிழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

அதன்படி, நிகழாண்டுக்கான விழா புதன்கிழமை நடைபெற்றது. சுவாமி கைலாச பா்வத வாகனத்திலும், அம்பாள் தங்கக்கிளி வாகனத்திலும் மலா் அலங்காரத்துடன் எழுந்தருளினா். பின்னா் அப்பா் பெருமானுக்கு திருக்காட்சி கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. தெப்ப திருவிழாவில் நூற்றுக்கணக்கானோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT