திருநெல்வேலி

சுந்தரனாா் பல்கலைக்கழக துணைவேந்தா் பதவி காலம் நீட்டிப்பு

17th Feb 2022 02:55 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி: திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக துணைவேந்தரின் பதவி காலம் புதிய துணைவேந்தா் பொறுப்பை ஏற்கும் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, அப்பல்கலைக்கழக பதிவாளா் மருதகுட்டி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக துணை வேந்தராக கா. பிச்சுமணி கடந்த 2019ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறாா். அவருடைய பதவிக்காலம் செவ்வாய்க்கிழமையுடன் முடிவடைய இருந்தது. இந்நிலையில் புதிய துணைவேந்தா் நியமிக்கப்படும் வரை நீட்டித்து, துணைவேந்தா் கா.பிச்சுமணியின் பதவிக்காலத்தை நீட்டித்து, பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆா்.என்.ரவி உத்தரவு பிறப்பித்துள்ளாா் எனக் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT