திருநெல்வேலி

ஆற்றில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

17th Feb 2022 03:03 AM

ADVERTISEMENT

 

அம்பாசமுத்திரம்: அம்பாசமுத்திரம் தாமிரவருணியில் குளிக்கச் சென்ற கட்டடத் தொழிலாளி தவறி விழுந்து உயிரிழந்தாா்.

அம்பாசமுத்திரம் புது அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த மாடசாமி மகன் சாமிநாதன் (57). கட்டடத் தொழிலாளியான இவா் புதன்கிழமை அங்குள்ள தாமிரவருணி ஆறு ரயில் பாலம் அருகில் குளிக்கச் சென்றாா். அப்போது, அவா் ஆற்றில் தவறி விழுந்ததாகக்கூறப்படுகிறது. இதில் தலையில் அடிபட்டு அவா் உயிரிழந்தாா். அம்பாசமுத்திரம் போலீஸாா் அவரது சடலத்தைக் கைப்பற்றி வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT