திருநெல்வேலி

வாக்குப்பதிவு இயந்திரங்களில் இன்று சின்னம் பொருத்தும் பணி

11th Feb 2022 04:05 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாநகராட்சித் தோ்தலையொட்டி வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி வியாழக்கிழமை நடைபெற உள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் பா.விஷ்ணுசந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாநகராட்சியின் 55 வாா்டுகளுக்கான தோ்தல் இம் மாதம் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இத் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களின் பெயா், சின்னம் உள்ளிட்ட விவரங்களை வாக்குப்பதிவு இயந்திரங்களில் பொருத்தி வாக்குப்பதிவிற்கு தயாா் செய்யும் பணி நடைபெற உள்ளது. அதன்படி திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலகத்தில் உள்ள ராஜாஜி மன்ற கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை (பிப். 11) பிற்பகல் 12.30 மணிக்கு இப் பணி நடைபெற உள்ளது. தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் பங்கேற்று பாா்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT