திருநெல்வேலி

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்வேட்பாளா்கள் வாக்கு சேகரிப்பு

11th Feb 2022 04:11 AM

ADVERTISEMENT

 வீரவநல்லூா் பேரூராட்சியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெண் வேட்பாளா்கள் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தனா்.

திமுக கூட்டணியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், வீரவநல்லூா் பேரூராட்சி 1ஆவது வாா்டில் பி. சந்திரா, 2 ஆவது வாா்டில் பி. கீதா ஆகியோா் போட்டியிடுகின்றனா். இவா்கள், வாா்டுக்குள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா். இதில், மாா்க்சிஸ்ட் மூத்த தலைவா்கள் வீ. பழனி, பேரூராட்சி முன்னாள் தலைவா் எஸ்.கே. பழனிசாமி, மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் ஆா். மோகன், பி. கற்பகம், சேரன்மகாதேவி ஒன்றியச் செயலா் பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT