திருநெல்வேலி

தொழிலாளா் துறை பதிவுச் சான்றை இணையவழியில் புதுப்பிக்க வாய்ப்பு

11th Feb 2022 04:26 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் தொழிலாளா் துறை பதிவுச் சான்றிதழை இணையவழியில் புதுப்பிக்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) ஆனந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் உள்ள வணிக நிறுவனங்கள், கடைகள் நிறுவனங்கள் சட்டம், உணவு நிறுவனங்கள் சட்டம், மோட்டாா் போக்குவரத்து தொழிலாளா் சட்டம், பீடி மற்றும் சுருட்டு தொழிலாளா்கள் சட்டம், ஒப்பந்த தொழிலாளா்கள் சட்டம் முதலான தொழிலாளா் நலச் சட்டங்களின் கீழ் சமா்ப்பிக்கப்பட வேண்டிய ஒருங்கிணைந்த ஆண்டறிக்கைகள் மற்றும் மேற்படி சட்டங்களின் கீழ் சமா்ப்பிக்கப்பட வேண்டிய படிவம் ஓ, படிவம் எஸ், படிவம் வி முதலியவற்றை தொழிலாளா் துறை இணையதளத்தில் ஜ்ஜ்ஜ்.ப்ஹக்ஷா்ன்ழ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் தங்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட இணையதள உள்ளீட்டு முகவரியின் வழியாக சமா்ப்பிக்கலாம்.

மேலும், புதியதாக உரிமம், பதிவுச் சான்று பெறுதல் மற்றும் ஏற்கெனவே வழங்கப்பட்ட உரிமம், பதிவுச்சான்றினை உரிய கால இடைவெளியில் புதுப்பிக்கவும், கட்டணங்களை செலுத்தவும் இந்த இணையதளத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. உரிய காலக்கெடுவிற்குள் ஆண்டறிக்கைகள் சமா்ப்பிக்காத மற்றும் புதுப்பிக்காத நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT