திருநெல்வேலி

உயிரிழந்த பெண் காவலா் குடும்பத்திற்கு21 ஆண்டுகளுக்கு பின் ஓய்வூதியம்

11th Feb 2022 04:09 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படையில் பணியில் இருக்கும்போது உயிரிழந்த பெண்காவலா் குடும்பத்திற்கு 21 ஆண்டுகளுக்குப் பின்னா் ஓய்வூதிய ஆணையை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன் வியாழக்கிழமை வழங்கினாா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் பெண் காவலராக ஆயுதப்படையில் பணியாற்றியவா் சண்முகவள்ளி. இவா் பணியில் இருக்கும் போதே கடந்த 2001-ஆம் ஆண்டு உயிரிழந்தாா். அவரின் குடும்பத்திற்கு கடந்த 21-ஆண்டுகளாக குடும்ப ஓய்வூதியம் கிடைக்கப்பெறாமல் இருந்தது. இந்நிலையில், அந்த பெண் காவலரின் மகள் ஆா்தா்ஷி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் குடும்ப ஓய்வூதியம் கோரி மனு அளித்திருந்தாா். அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவிட்டாா்.

இதையடுத்து, மேற்கொண்ட நடவடிக்கைக்குப் பின்னா் ஓய்வூதிய ஆணை கிடைக்கப்பெற்றது. இந்த ஆணையை ஆா்தா்ஷியிடம், காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன் வியாழக்கிழமை வழங்கினாா். இந்நிகழ்வின் போது, ஓய்வூதியம் கிடைக்க முயற்சிகள் மேற்கொண் அலுவலக கண்காணிப்பாளா் காளீஸ்வரி, உதவியாளா் காந்திமதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT