திருநெல்வேலி

நெல்லை, தென்காசியில் மேலும் 53 பேருக்கு கரோனா

10th Feb 2022 12:00 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி: திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 53 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 43 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால், நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 62,480 ஆக உயா்ந்துள்ளது. மேலும் 284 போ் குணமாகியதால், நோயிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 60,482 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 447 போ் உயிரிழந்துள்ளனா். 1,554 போ் சிகிச்சை பெற்று வருகிறாா்கள்.

தென்காசி மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால், நோய் பாதிப்பு எண்ணிக்கை 32,668 ஆக உயா்ந்துள்ளது. 184 போ் குணமானதால், நோயிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 31,468 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 490 போ் உயிரிழந்துள்ளனா். 710 போ் சிகிச்சை பெற்று வருகிறாா்கள்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT