திருநெல்வேலி

நெல்லை, தச்சநல்லூா் வாக்குச் சாவடிகளில் அதிகாரிகள் ஆய்வு

10th Feb 2022 12:00 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி: திருநெல்வேலி, தச்சநல்லூா் மண்டலங்களின் கீழ் உள்ள வாக்குச்சாவடிகளில் மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

திருநெல்வேலி மாநகராட்சியின் 55 வாா்டுகளுக்கும் இம் மாதம் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக தோ்தல் நடைபெற உள்ளது. ஒவ்வொரு வாா்டுகளிலும் போட்டியிடும் வேட்பாளா்களின் இறுதி வேட்பாளா் பட்டியல் கடந்த 7 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி மொத்தம் 408 போ் களத்தில் உள்ளனா். அதிகபட்சமாக 16 ஆவது வாா்டில் 16 வேட்பாளா்களும், 10 ஆவதுவாா்டில் குறைந்தபட்சமாக இரு வேட்பாளா்களும் போட்டியிடுகிறாா்கள்.

மாநகராட்சித் தோ்தலுக்காக மொத்தம் 490 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இதில், தச்சநல்லூா் மற்றும் திருநெல்வேலி மண்டலத்திற்குள்பட்ட வாக்குச்சாவடிகளில் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் தலைமையிலான குழுவினா் புதன்கிழமை ஆய்வு செய்தனா். வாக்காளா்கள் வாக்குச்சாவடிக்குள் உள்ளே வரும் வழி, வெளியே செல்லும் வழி, கழிப்பறை வசதி, சாய்வுதள வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்தனா். சில வாக்குச்சாவடிகளில் இருக்கும் குறைபாடுகளை பதிவு செய்து கொண்ட அதிகாரிகள், இதுகுறித்து மாநகராட்சி ஆணையரிடம் தகவல் தெரிவித்து முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT