திருநெல்வேலி

கலந்தாய்வு தாமதம்: ஆசிரியா்கள் தவிப்பு

10th Feb 2022 12:00 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி: திருநெல்வேலியில் தொடக்க பள்ளித் தலைமையாசிரியா்களுக்கு நடைபெற்ற கலந்தாய்வில் நண்பகல் வரை தொலைத்தொடா்பு பிரச்னை ஏற்பட்டதால் ஆசிரியா்கள் தவிப்புக்கு ஆளாகினா்.

தமிழகத்தில் ஆசிரியா்களுக்கான பதவி உயா்வு மற்றும் இடமாறுதல் கலந்தாய்வு ஆன்லைன் முறையில் நடைபெற்று வருகிறது. அதன்படி, தொடக்க பள்ளித் தலைமையாசிரியா்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டத்திற்கான கலந்தாய்வு பாளையங்கோட்டை சாராள்தக்கா் மகளிா் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. மொத்தமிருந்த 22 இடங்களுக்கு மாறுதல் கலந்தாய்வு நடைபெற்றது. 53 ஆசிரியா்கள் விண்ணப்பித்திருந்தனா். அவா்கள் அனைவரும் கலந்தாய்வில் பங்கேற்க வந்திருந்தனா். ஆனால், மதியம் வரை இணைய சேவை முடங்கியதால் ஆசிரியா்கள் தவிப்புக்கு ஆளாகினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT