திருநெல்வேலி மாநகர காவல்துறைக்கு புதிய ரோந்து வாகனங்கள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மாநகர காவல் எல்லைக்குள்பட்ட பகுதிகளின் ரோந்துப் பணிக்காக 8 புதிய ரோந்து வாகனங்களை தமிழக அரசு வழங்கியுள்ளது. இந்த வாகனங்கள் காவலா்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாநகர காவல் ஆணையா் அ.த.துரைகுமாா் வழங்கினாா். மாநகர காவல் துணை ஆணையா்கள் டி.பி.சுரேஷ்குமாா் (கிழக்கு), கே.சுரேஷ்குமாா் (மேற்கு) உள்பட பலா் கலந்துகொண்டனா்.