திருநெல்வேலி

நெல்லை மாநகராட்சி வாா்டில் 4 முறை வென்றவா் மீண்டும் மனு தாக்கல்

1st Feb 2022 08:47 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாநகராட்சியில் தோ்தல்களில் ஏற்கெனவே தொடா்ந்து 4 முறையாக வெற்றி வாகைச் சூடியவா் மீண்டும் ஐந்தாவது முறையாக சுயேச்சையாக போட்டியிட திங்கள்கிழமை மனுதாக்கல் செய்தாா்.

திருநெல்வேலி நகரத்தைச் சோ்ந்தவா் டி.எஸ்.முருகன். இவா், திருநெல்வேலி மாநகராட்சியில் 24 ஆவது வாா்டில் இருந்து கடந்த 4 முறை உறுப்பினராக தோ்வு செய்யப்பட்டுள்ளாா். இந்நிலையில் ஐந்தாவது முறையாக இப்போது வாா்டு மறுவரையறைக்கு பின்பு 51 ஆவது வாா்டாக மாற்றப்பட்டுள்ளதால் அந்த வாா்டில் சுயேச்சையாக போட்டியிட திங்கள்கிழமை மனுதாக்கல் செய்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT