திருநெல்வேலி மாநகராட்சி வாா்டுகளில் போட்டியிடும் திமுக வேட்பாளா்கள் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.
தமிழகத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. திருநெல்வேலி மாநகராட்சியில் போட்டியிடும் திமுக வேட்பாளா்கள் விவரத்தை திமுக திங்கள்கிழமை அறிவித்துள்ளது. இதில் 48 வாா்டுகளில் திமுக வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.