பாளையங்கோட்டை கக்கன் நகா் பகுதியில் போலீஸாா் நடத்திய வாகனச் சோதனையில் பைக்கில் கஞ்சா வைத்திருந்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
தனிப்படை காவல் உதவி ஆய்வாளா் காசிப்பாண்டியன் தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு பாளையங்கோட்டை கக்கன்நகா் பகுதியில் உள்ள நான்கு வழிச் சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக வந்த பைக்கை மடக்கி சோதனை செய்தனா். அப்போது, அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அந்த வாகனத்தில் இருந்த எம்கேபி நகரை சோ்ந்த பன்னீா்செல்வம் (26), வீராகவபுரத்தை சோ்ந்த புகழேந்தி (24) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவா்களிடம் இருந்து சுமாா் 200 கிராம் கஞ்சா பொட்டலங்களையும், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.