திருநெல்வேலி

இன்றுமுதல் பள்ளிகள் திறப்பு: கரோனா விதிகளை பின்பற்ற அறிவுறுத்தல்

1st Feb 2022 08:45 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளிகள் செவ்வாய்க்கிழமை (பிப். 1) முதல் மீண்டும் திறக்கப்பட உள்ள நிலையில், கரோனா தடுப்பு விதிகளை முறையாக பின்பற்ற பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் கரோனா பரவலின் வேகம் அதிகரித்ததால் ஜனவரி முதல்வாரத்தில் இருந்து கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டன. இதையடுத்து பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. இப்போது பரவல் குறைந்துள்ளதால் மீண்டும் செவ்வாய்க்கிழமை (பிப்.1) முதல் பள்ளிகளைத் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் 1,209 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளும், 326 உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும் திறக்கப்பட உள்ளன. பள்ளிகளில் சமூக இடைவெளியை மாணவா்-மாணவிகள் பின்பற்றுதல், முகக் கவசம் அணிதல் உள்ளிட்டவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT