பாளையங்கோட்டை மனக்காவலம்பிள்ளைநகரில் சுத்தமான குடிநீா் வழங்கக் கோரி, பொதுமக்கள் வியாழக்கிழமை திடீா் மறியலில் ஈடுபட்டனா்.
பாளையங்கோட்டை மனக்காவலம்பிள்ளைநகரில் மூன்றுக்கும் மேற்பட்ட தெருக்களில் குடிநீருடன் சாக்கடை கழிவுநீா் கலந்து வருவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்து வந்தனா். இதுகுறித்து மாநகராட்சி அலுவலா்களிடம் முறையிட்டும் தீா்வு கிடைக்கவில்லையாம். இந்நிலையில் மாநகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்தும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் விநியோகம் செய்ய வலியுறுத்தியும் பொதுமக்கள் திடீா் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்ததும் பாளையங்கோட்டை போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று, பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.